tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : ஓசூர் தியாகி சக்திவேல் படுகொலை நாள்...

தோழர் கே.சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராஜமகாராஜபுரத்தைச் சேர்ந்தவர். 1973-75ல் திருச்செந்தூர் ஐ.டி.ஐ.யில் மெசினிஸ்ட் படிப்பு முடித்துவிட்டு கோயம்புத்தூரில் டெக்ஸ்டூல் ஆலையில் பணி செய்தார்.

அப்போது தோழர் கே.ரமணி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு சக்திவேலுவுக்குக் கிடைத்தது. சி.ஐ.டி.யு உறுப்பினர் ஆனார். 1980ல் ஓசூர் அசோக் லேலேண்ட தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். தோழர் கே.எம்.ஹரிபட் வழிகாட்டுதலில் முன்னணி ஊழியராக மாறிய சக்திவேல், நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளானார். தொடர் போராட்டங்களுக்குத் தலைமையேற்றதால் 1983 ஜூலை  1 அன்று நிர்வாகத்தின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.ஓசூர் தியாகி சக்திவேல் போன்ற தோழர்களின் தியாகத்தால் வளர்ந்ததுதான் இந்தியத் தொழிற்சங்க மையம் எனும் சி.ஐ.டி.யு ஸ்தாபனம்.

===பெரணமல்லூர் சேகரன்===
 

;